Theme Check

மந்திரம் ஓதியபடியே தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்.. காட்டி கொடுத்த வீடியோ !

மந்திரம் ஓதியபடியே தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்.. காட்டி கொடுத்த வீடியோ !

மந்திரம் ஓதியபடியே தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்.. காட்டி கொடுத்த வீடியோ !
X

திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் ஒருவர் தாலியை திருடியது வீடியோ மூலம் அம்பலமானது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் ஏற்பாட்டில் தடால்புடாலாக நடந்தது. இந்த திருமணத்தை நடத்திய புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதினார். அப்போது அவர் நைசாக தாலியில் இருந்த தங்க குண்டுமணிகளை திருடியதாக தெரிகிறது

இது குறித்து திருமணத்தில் கலந்து கொண்ட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திருமண வீடியோவை திருமண வீட்டார் போட்டு பார்க்கும்போது புரோகிதர் தாலியில் உள்ள தங்கத்தை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் திருமண வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் புரோகிதரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு புரோகிதரே தாலியில் உள்ள தங்கத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it