Theme Check

பிரதமர் மோடி என்னிடம் ஆணவமாக பேசினார்.. ஆளுநர் பகிரங்கப் புகார் !!

பிரதமர் மோடி என்னிடம் ஆணவமாக பேசினார்.. ஆளுநர் பகிரங்கப் புகார் !!

பிரதமர் மோடி என்னிடம் ஆணவமாக பேசினார்.. ஆளுநர் பகிரங்கப் புகார் !!
X

விவசாயிகள் உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியபோது மிக ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலய ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் தாத்ரி பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் மேகாலய ஆளுநர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி குறித்து அவர் பேசிய காணொலி தான் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அவர் பிரதமர் மோடி குறித்து பேசியிருந்தார்.

s

அந்த வீடியோவில் மேகாலயா ஆளுநர் பேசியதாவது, சமீபத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன். நாங்கள் விவாதிக்க ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே பிரதமர் கோபத்துடனும், ஆணவத்துடனும் பேசினார். நம் நாட்டின் 500 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளதாக கூறியபோது, அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.

ஆமாம். நீங்கள்தான் நாட்டின் பிரதமர் எனக் கூறினேன். பின்னர், கோபமடைந்த பிரதமர், என்னை அமித் ஷாவை சந்திக்குமாறு தெரிவித்துவிட்டார், என கூறியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சால் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் பிரதமர் மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it