நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், ‘வங்கத்துச் சிங்கம்’ என்றும் நம் மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நேதாஜி பெயரிலான விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
ஏற்கெனவே பிரதமர் மோடி நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். புதிய கிரானைட் சிலை அமைக்கப்படும் வரை இந்த லேசர் முறையிலான முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story

