Theme Check

தேர்தல் வந்தாலே உடைகளை மாற்றி வேடம்போடும் பிரதமர் மோடி.. முதலமைச்சர் கடும் தாக்கு

தேர்தல் வந்தாலே உடைகளை மாற்றி வேடம்போடும் பிரதமர் மோடி.. முதலமைச்சர் கடும் தாக்கு

தேர்தல் வந்தாலே உடைகளை மாற்றி வேடம்போடும் பிரதமர் மோடி.. முதலமைச்சர் கடும் தாக்கு
X

தேர்தல் நடைபெற்றால் ரவீந்தரநாத் தாகூர் போல தாடி.. தமிழகத்துக்கு சென்றால் லுங்கி கட்டுவது.. கோமாளித்தனங்களால் என்னதான் இந்த தேசத்துக்கு கிடைத்துள்ளது? என பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டில் சாமானியர்கள், ஏழைகள் உள்ளிட்டோருக்கு எதுவுமேயில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பட்ஜெட்டிற்கு அத்திருப்தி தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது: பிரதமர் மோடி அணிகின்ற உடைகளும் மத்திய பட்ஜெட்டும் தோற்றத்தில் கவர்ச்சிகரமாகத்தான் இருக்கின்றன. ஆனால் சாரம்சம் என்று பார்த்தால் எதுவுமே இல்லையே. தேர்தல் காலம் வந்துவிட்டால் ரவீந்தரநாத் தாகூர் போல தாடி வளர்க்கிறார் மோடி. தமிழகத்துக்கு போனால் லுங்கி (வேஷ்டியை தான் அப்படி குறிப்பிடுகிறார்) அணிகிறார்.

modi-vesdi

பஞ்சாப் சட்டசபை தேர்தல் என்றால் டர்பன் கட்டிக் கொள்கிறார். மணிப்பூருக்கு போனால் மணிப்பூர் தொப்பி... உத்தரகாண்ட் போனால் உத்தரகாண்ட் தொப்பி.. இதுமாதிரி எத்தனை தொப்பிகளைத்தான் போடுவாரோ மோடி? இத்தகைய கோமாளித்தனங்களால் என்னதான் இந்த தேசத்துக்கு கிடைத்துள்ளது?.

பாஜகவினர் வகுப்புவாத, பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்து விளையாடி வருகின்றனர். இது நீண்டகாலம் நிலைக்காது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார். பாஜக மத்தியில் இருந்து அகற்றப்பட்டு, வங்கக் கடலில் வீசப்பட வேண்டும். நாட்டுக்கு எது தேவையோ அதை நாங்கள் செய்வோம். அமைதியாக உட்கார்ந்திருக்கமாட்டோம். இதுதான் ஜனநாயகம்.

modi-vesdi

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்த மும்பை செல்லவுள்ளேன். இந்த நாட்டிற்கு என்ன தேவையோ அதை செய்ய தொடங்குவோம். நம் நாடு வலுவாக உள்ளது, எங்கு தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் நாடு எதிர்வினையாற்றுகிறது என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். மாற்றத்திற்கான, புரட்சிக்கான தேவை இருக்கிறது. நாம் போராடாதவரை, மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறீர்களே? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எனில் மாநிலத்தின் முதல்வர் வரவேற்பது இயல்பானதுதான். இதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பது அரசு முறையிலான நிகழ்வு.

அதேநேரத்தில் பிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது என் கொள்கை. பிரதமர் மோடியுடன் ஹெலிகாப்டரில் ஒன்றாக பயணித்தாலும் கூட அப்போதும் அவரிடம் இதனையே நான் சொல்வேன். அப்படியெல்லாம் பின்வாங்கும் நபர் நானல்ல, என்றார்.

newstm.in

Next Story
Share it