Theme Check

பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!!

பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!!

பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!!
X

முகநூலில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த சேலத்தை சேர்ந்த பெண் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் இலவச சட்ட பணிகள் ஆணைய அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் பரிமளா. இவர் தன்னை, சமூக ஆர்வலராக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளார். அரசியல் நடப்புகள் குறித்து முகநூலில் தனது கருத்துகளை பதிவிட்டு வரும் அவர், கடந்த இருதினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்த பதிவு, சமூக வலைதளத்தில் வைரலாகியது.

பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல்.. சேலம் பெண் குறித்து துப்பு துலக்கும் போலீஸ்!! மோடி ஆட்சியில் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாகவும், அவரை கொல்ல தான் மனித வெடிகுண்டாக செயல்பட தயார் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியினர் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணையை துவங்கியதை அறிந்த பிரமிளா, தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கும் அரசு பொறுப்பாளர்களுக்கும் எந்தவித மிரட்டலும் தன்னால் வேண்டுமென்றே பதிவிடப்படவில்லை எனவும், துரதிர்ஷ்டவசமாக பதிவு நிகழ்ந்து விட்டதாகவும் பரிமளா குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it