திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி யோகா தின உரை !!
திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி யோகா தின உரை !!

இன்று (திங்கட்கிழமை) 7-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. கொரோனா காலத்தில் யோகா முக்கியத்துவம் பெறுகிறது என கூறினார்.

மேலும் உலக மக்கள் அனைவரும் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காலத்தில் யோகா முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவர்கள், பணியாளர்கள் யோகாவை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் யோகா நமக்கு உள் வலிமையை கூட்டுகிறது எனவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.. என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
திருக்குறளுக்கான பொருள்: ( நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).)
newstm.in

