Theme Check

மோடிக்கு முன்னால் தமிழகம் வருகிறார் ப்ரியங்கா காந்தி!

மோடிக்கு முன்னால் தமிழகம் வருகிறார் ப்ரியங்கா காந்தி!

மோடிக்கு முன்னால் தமிழகம் வருகிறார் ப்ரியங்கா காந்தி!
X

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. இங்கு பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகிறார்கள்.


இதனையடுத்து கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குமரி மாவட்டம் வந்து தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி மார்ச் 27ம் தேதி குமரி மாவட்டம் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it