Theme Check

பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

கடந்த 24-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அன்பழகனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!
X

கடந்த 24-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


அன்பழகனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் ஸ்டாலினிடம் விவரித்துள்ளனர். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே அவரது உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு அவர் சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அன்பழகன் உடல்நிலை மோசமானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it