Theme Check

தடைகேட்ட வழக்கு நாளை விசாரணை.. வழக்கறிஞர்களுடன் இன்று ஓபிஎஸ் ஆலோசனை..!

தடைகேட்ட வழக்கு நாளை விசாரணை.. வழக்கறிஞர்களுடன் இன்று ஓபிஎஸ் ஆலோசனை..!

தடைகேட்ட வழக்கு நாளை விசாரணை.. வழக்கறிஞர்களுடன் இன்று ஓபிஎஸ் ஆலோசனை..!
X

வரும் 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தனி நீதிபதி முன் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டார்.

அப்போது, இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று, நாளை விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், எம்பி தர்மர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it