பிப்ரவரி 11 வரை தடை நீட்டிப்பு!!
பிப்ரவரி 11 வரை தடை நீட்டிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலங்களில் வருகிற பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று (ஜன. 31) வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை பிப்ரவரி 11 தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இருப்பினும் தேர்தல் ஆணையம் பொதுக் கூட்டங்களுக்கான மக்கள் எண்ணிக்கையை 500-ல் இருந்து 1000 ஆக தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக 500 பேர் கொண்ட உள்ளரங்க கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது மற்றும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் நபர்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 20 ஆக உயர்த்தியுள்ளது.

