பிப்.1 முதல் கேசினோ செல்ல தடை - முதல்வர் அதிரடி
வரும் பிப்.,01ம் தேதி முதல் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல கோவா உள்ளூர் மக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

வரும் பிப்ரவரி 01-ம் தேதி முதல் கோவா உள்ளூர் மக்கள் சூதாட்ட விடுதிக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது
இது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்து கொண்டிருந்தது.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக வரும் பிப்.,01ம் தேதி முதல் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல உள்ளூர் மக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் மரணமடைந்ததை அடுத்து, கோவா மாநிலத்துக்கு புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
newstm.in
Tags:
Next Story

