Theme Check

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு.. பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் !!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு.. பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் !!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு.. பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் !!
X

தமிழக சட்டப்பேரயைில் கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் 243 அலுவலகங்களிலும் இதே நிலை நீடிக்கிறது என்றும், ஊழியர்கள் பற்றாகுறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கோரினார்,

govt
இதற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வானையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்சினைகள் இருபதாகவும், நீதிமன்றம், கொரோனா காரணமாக பல தேர்வுகள் தள்ளிபோய்யிருப்பதால் தான் காலி பணியிடங்கள் அதிகரித்ததற்கு காரணம் என்றார்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது. ஒரு அரசு ஊழியர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது. அங்கேயே பணியாற்றினால் அங்கு பிரச்சினைகள் ஏற்படும், பணியின் நிமித்தமாக பதவி உயர்வு பெற்றால் அந்த அதிகாரி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்கும் நிலையேற்படும்.

govt
இவை எல்லாம் தமிழ் நாட்டில் சரியாக பின்பற்றபடுவது கிடையாது. ஆகவே இதை கலையவே மனிதவள மேம்பாடு மையம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருவதாகவும், விரைவில் காலிபணியிடங்கள் நிரப்படுமென அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it