Theme Check

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மதமாற்ற புகார்!!

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மதமாற்ற புகார்!!

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மதமாற்ற புகார்!!
X

திருப்பூர் அரசு பள்ளியில் மதம் மாற்றும் வேலையில் ஆசிரியை ஈடுபடுவதாக பெற்றோர் மற்றும் இந்து முன்னணியினர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி பள்ளி செல்லும் பொழுது நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்வது வழக்கம்.

தமிழ் ஆசிரியை திலகவதி மாணவியை பார்த்து தினமும் நெற்றியில் பட்டை போட்டு வர தெரிகிறது, ஒழுங்காக படிக்க தெரியாதா என்று திட்டியதோடு இயேசுநாதரை பிரார்த்தனை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

tpr

ஆசிரியை இஷ்ட தெய்வங்களை கூறும்படி கேட்கும் பொழுது மாணவி சிவன் என்று சொன்னதாகவும் அதற்கு ஆசிரியை இயேசு தான் உண்மையான சக்தியுள்ள கடவுள் நம்மை காப்பாற்றக் கூடியவர் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆங்கில ஆசிரியை கல்பனாவும் மாணவியை திட்டியதோடு எழுத்துப் பயிற்சியில் முருகன் சிவன் விநாயகர் கிருஷ்ணர் என்று இந்து தெய்வங்கள் பெயரை எழுதக்கூடாது என்று கடுமையாக மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் பள்ளி செல்ல மறுப்பதோடு அச்சத்தில் உள்ளதாகவும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it