Theme Check

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் விபச்சாரம்! போலீசார் அதிர்ச்சி!

ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில்..? - மையத்திற்கு பூட்டு..

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் விபச்சாரம்! போலீசார் அதிர்ச்சி!
X

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் செங்குந்தபுரத்தில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் விபச்சாரம்! போலீசார் அதிர்ச்சி!

இதையடுத்து, கரூர் நகர காவல் நிலைய போலீசார் அந்த மையத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஒருவர் இருந்தனர். அந்த நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தையும் பூட்டினர். பகலில் நடந்த இந்த சோதனையும், ஊழியர்களை போலீசார் அழைத்து சென்றதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கரூரில் மசாஜ் செண்டர்கள், ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் விபச்சாரம் நடந்து வருவது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மசாஜ் செண்டர்கள் என்கிற பெயரிலும், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் என்கிற பெயரில் இயங்கி வருபவைகளை போலீசார் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it