சினிமா நடிகைகள், மாடல்களை வைத்து சென்னையில் விபச்சாரம்! இயக்குநரின் மனைவி கைது!! சென்னையில் பரபரப்பு!
சினிமா நடிகைகள், மாடல்களை வைத்து சென்னையில் விபச்சாரம்! இயக்குநரின் மனைவி கைது!! சென்னையில் பரபரப்பு!

சென்னை விரும்பாக்கம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி தனிப்படையினர் வாடிக்கையாளர்கள் போல் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் திரைப்பட இயக்குநர் ஒருவரின் மனைவியான காந்திமதி (40) பாலியல் தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது.

அப்போது, அவர் சினிமா பிரபலங்கள் மற்றும் மாடலிங் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் இயக்குநர் மனைவி காந்திமதியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாடலிங் அழகி ஒருவரையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட காந்திமதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளிவந்துள்ளன. அதாவது, சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையோடு வரும் இளம் பெண்கள் மற்றும் மாடலிங் அழகிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அவர்களிடம் உங்களுக்கு பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி தன் வசப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், இளம் அழகிகளிடம் சினிமா ஆசைகாட்டி அவர்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தொழிலதிபர்களுக்கு அனுப்பி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளதாக போலீசார் கூறகின்றனர். பின்னர் போலீசார் காந்திமதி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திரைப்பட இயக்குநர் மனைவி ஒருவர் பாலியல் தொழில் நடத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

