தமிழகத்துக்கு பெருமை... இசையில் கின்னஸ் சாதனை படைத்த 12 வயது சிறுவன் !!
தமிழகத்துக்கு பெருமை... இசையில் கின்னஸ் சாதனை படைத்த 12 வயது சிறுவன் !!

ஆஸ்திரேலியாவில் தமிழ் சிறுவன் ட்ரம்ஸ் (drums) வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 12 வயதான பிரிதீஷ் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருகிறார். தற்போது 12 வயது ஆனாலும் சிறு வயது முதலே ட்ரம்ஸ் இசைக்கருவியை இசைப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பெற்றோரும் பக்கப்பலமாக இருந்து சிறுவனுக்கு ஊக்கம் அளித்தனர்.
இதனால் இசைக்கலைஞராக உருவான பிரதீஷ், அடுத்து உலகச்சாதனை முயற்சியிலும் ஈடுபட்டார். அதன்படி, ட்ரம்ஸ் வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2,370 முறை drumbeats-ஐ வாசித்ததன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை தற்போது தமிழ் சிறுவன் பிரிதீஷ் முறியடித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை தமிழ் சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in