இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை.. கண்ணீர் ததும்ப பேசிய குலாம் நபி ஆசாத் !!
இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை.. கண்ணீர் ததும்ப பேசிய குலாம் நபி ஆசாத் !!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, குலாம்நபி ஆசாத் குறித்து உணர்ச்சி பொங்க பிரதமர் மோடி பேசினார். குலாம் நபி ஆசாத் எத்தனையோ பதவிகளை வகித்திருந்தாலும் அவருக்கு தலைக்கனம் இருந்தது இல்லை. என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என பிரதமர் பேசினார்.

இந்நிலையில் இன்றோடு பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். அப்போது, அவர் கண்ணீர் மல்க பேசியது அனைவரையும் உணர்ச்சிவசப்படச் செய்தது.
பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லீமாக எனக்கு பெருமை கொள்கிறேன்.
தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்? என கண்ணீர் மல்க பேசினார்.
newstm.in

