தெரு நாயின் ஆண் உறுப்பை துண்டாக்கிய சைக்கோ.. மக்கள் அதிர்ச்சி !!
தெரு நாயின் ஆண் உறுப்பை துண்டாக்கிய சைக்கோ.. மக்கள் அதிர்ச்சி !!

தெருவில் வசித்து வந்த நாயின் ஆண் உறுப்பை வெட்டி துண்டாக வீசிய கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு அந்தேரியின் கபஸ்வாடி பகுதியில் அதிகளவில் நாய்கள் நடமாட்டம் உள்ளது. எனினும் அப்பகுதி மக்களுக்கு நாய்களால் எவ்வித தொந்தரவும் கிடையாது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று நள்ளிரவில் தெரு நாய் ஒன்று வலியால் சத்தம்போட்டு இருந்துள்ளது. தொடர்ச்சியாக சத்தம் கேட்டதால் அப்பகுதியினர் சென்று பார்த்தப்போது, நாயின் ஆண் உறுப்பை மர்ம நபர் ஒருவர் துண்டாக வெட்டியிருப்பது தெரியவந்தது.

ஆண் உறுப்பு வெட்டப்பட்டதால் ரத்தம் வழிந்தோடிய நிலையில் அந்த நாயை மும்பை பரேல் பகுதியில் செயல்பட்டு வரும் SPCA கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். நாயின் உயிரை காப்பாற்ற உடனடியாக அவசர அறுவை சிகிச்சை ஒன்று மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நாயின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் கபஸ்வாடி பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீசார் இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டி.என் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தனர். சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என விசாரிக்குமாறு காவல்துறையினரிடன் வேண்டுகோள் வைத்துள்ளோம் என்றார்.

இதனிடையே விலங்குகளுக்கு எதிரான PCA 1960 சட்டத்தை திருத்த வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த சட்டத்தின்படி, விலங்குகளை துன்புறுத்துபவர்கள் 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

