Theme Check

இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி..!!

இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி..!!

இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி..!!
X

கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கியிருப்பதாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டுள்ளதாலும் சென்னை கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக கூடக்கூடாது. மாஸ்க் அணிந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
Share it