Theme Check

வரும் 13-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை..!!

வரும் 13-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை..!!

வரும் 13-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை..!!
X

கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு வரும் 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

'தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா 10.05.2022 முதல் 17.05.2022 வரை நடைபெற்று வருகிறது . இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளுர் விடுமுறை தினத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளீதரன், தெரிவித்துள்ளார்.

Next Story
Share it