Theme Check

பொது அமைதி, பொது ஒழுங்கு கெடுதல்.. குணா மீது பாய்ந்தது குண்டாஸ்..!

பொது அமைதி, பொது ஒழுங்கு கெடுதல்.. குணா மீது பாய்ந்தது குண்டாஸ்..!

பொது அமைதி, பொது ஒழுங்கு கெடுதல்.. குணா மீது பாய்ந்தது குண்டாஸ்..!
X

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.

இதையறிந்த படப்பை குணா, கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது....!
இந்நிலையில், சிறையில் உள்ள படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொது அமைதியையும் பொது ஒழுங்கையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அந்த கடிதம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it