திருவள்ளூவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம் !!

திருவள்ளூவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம் !!

திருவள்ளூவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம் !!
X

பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்ற திருவள்ளூவர் ஓவியம் திருத்தப்படும் என்று புத்தகத்தை அச்சடித்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பாடலாசிரியர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 8-வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் முன் தலையில் முடியில்லாமல், உச்சியில் குடுமி வைத்து, நெற்றியில் பட்டை போட்டு, காவி உடை அணிந்தவாறு திருவள்ளூவரின் ஓவியம் இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எதிர்கட்சிகள் பல மத்திய அரசுக்கும், தமிழகத்தில் ஆளுங்க கட்சியாக அதிமுக-வுக்கும் கண்டனங்களை தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் சிபிஎஸ்இ-யின் இந்த செயலை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து,

’’உலகப் பொதுமறை திருக்குறள்;
உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர்.

அவருக்கு
வர்ண அடையாளம் பூசுவது
தமிழ் இனத்தின் முகத்தில்
தார் அடிப்பது போன்றது.
ஏற்றுக்கொள்ள முடியாது.
திருத்துங்கள்; இல்லையேல்
திருத்துவோம்’’ என சிபிஎஸ்இ-க்கு தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில் புத்தகத்தை அச்சடித்த மேக்மில்லன் பதிப்பகம், திருவள்ளூவரை மத அடையாளங்களுடன் சித்தரிக்கப்பட்ட தவறு திருத்தப்படும் என தெரிவித்திருந்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள வைரமுத்து, இதுதொடர்பாக ட்விட்டரில்,

’’பாடப் புத்தகத்தில் மரபுக்கு மாறாகத்
தீட்டப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்
திருத்தப்படும் என்று
மேக்மில்லன் பதிப்பகம்
அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்;
நன்றி தெரிவிக்கிறோம்.

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும்
நேரக்கூடாது என்று
நேர்மையாக வேண்டுகிறோம்.’’ என்று பதிவிட்டுள்ளார்.



விரைவிலேயே மேக்மில்லன் பதிப்பகம் தமிழகத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ஏற்றவாறு மாற்றி அச்சடிக்கப்பட்ட திருவள்ளூவர் படம் இடம்பெற்றுள்ள புத்தகத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it