பஞ்சாபி பாடகர் சுட்டுக்கொலை.. இந்தியாவில் கலாச்சாரம்?
பஞ்சாபி பாடகர் சுட்டுக்கொலை.. இந்தியாவில் கலாச்சாரம்?

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்ததேர்தலில் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில், 29 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த பஞ்சாப் தேர்தலில் மான்சா மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியப்போதும் இவர் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் சித்து மூஸ் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ஜீப் வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சித்து மூஸ் வாலா ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மான்சாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பயங்கர சம்பவத்தில் சித்து மூஸ் வாலாவுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்ட ஒரு நாளுக்கு பின்னர் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
சித்து மூஸ் வாலாவின் கொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் வேட்பாளரும் திறமையான இசைக்கலைஞருமான சித்து மூஸ் வாலாவின் கொலை, காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த தீவிர துக்கத்தின் போது நாங்கள் ஒற்றுமையாகவும், உறுதியுடனும் நிற்கிறோம், என்று தெரிவித்துள்ளது
இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையே குற்றவாளிகள் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

