Theme Check

திருமண பரிசு தருவதாக மணமகனின் கண்ணை கட்டி கழுத்தை அறுத்த புஷ்பா

திருமண பரிசு தருவதாக மணமகனின் கண்ணை கட்டி கழுத்தை அறுத்த புஷ்பா

திருமண பரிசு தருவதாக மணமகனின் கண்ணை கட்டி கழுத்தை அறுத்த புஷ்பா
X

புஷ்பானா Flower'னு நினைச்சயா? என்ற படத்தின் வசத்தை மெய்பிக்கும் வகையில் இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு முன்பு மணமகனை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடு குளமங்கலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராமாநாயுடு (28). ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரியும் இவருக்கு புஷ்பா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது. இரு வீட்டாரும் பேசி மே 26ஆம் தேதி திருமணம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவரது பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளில் செய்து வந்தனர். அதேநேரத்தில் திருமணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என புஷ்பா திட்டமிட்டு வந்தார்.

marriage

திருமணத்தை ஒரே அடியாக நிறுத்த ஒரே தீர்வு மணமகனை தீர்த்துகட்டுவது தான் என முடிவு செய்து, மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக புஷ்பா வரவழைத்தார். மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறி கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா வீட்டிற்கு சென்றனர். அப்போது புஷ்பாவின் பெற்றோர் திருமண பத்திரிகை வழங்க வெளியூர் சென்றிருந்தனர்.

வீட்டில் இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார். இதற்கு மணமகன் சம்மதம் தெரிவித்ததால் தன்னுடைய துபட்டாவை எடுத்து மணமகனின் கண்ணை கட்டினார். பின்னர் திடீர் என தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகனின் கழுத்தை அறுத்தார்.

marriage

மணமகனின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. முதலில் கொலை செய்ய துணிந்தபோதும் ரத்தம் வருவதை கண்டு அச்சமடைந்த புஷ்பா மணமகனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது மருத்துவர்களிடம் மணமகன் தடுக்கி விழுந்ததில் கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

புஷ்பாவை காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து புதிய பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணமகளை கைது செய்தனர். தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுதை மணமகள் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it