அப்படி போடு.. தடுப்பூசி போட்டால் தங்க மூக்குத்தி பரிசு.. ஆண்களுக்கும் உண்டு !!
அப்படி போடு.. தடுப்பூசி போட்டால் தங்க மூக்குத்தி பரிசு.. ஆண்களுக்கும் உண்டு !!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவசமாக தங்க மூக்குத்தி பரிசு அளிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதுக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பலரும் அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை என புகார் எழுகிறது. இதனால் தடுப்பூசி குறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தடுப்பூசி முகாம் ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தங்க நகை செய்வோர் அமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி, பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக இந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகளவில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

