அவங்கள புடிச்சி குண்டாஸ்ல போடுங்க.. கொந்தளிக்கிறார் காமாட்சிபுரி ஆதீனம்..!
அவங்கள புடிச்சி குண்டாஸ்ல போடுங்க.. கொந்தளிக்கிறார் காமாட்சிபுரி ஆதீனம்..!

“கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என, காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது; “பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் உலகிலுள்ள சைவ பெருமக்களின் மூலஸ்தானமாக உள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது, ஆதீன பெருமக்கள், சிவனடியார்கள், மடாதிபதிகள் மற்றும் பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது ஏற்பட்டு பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றன. இதற்கு எதிராக இந்துக்கள் போராட்டம் நடத்தினாலும், உரிய தீர்வு ஏற்படுவதில்லை.
மத நம்பிக்கையை புண்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது அவசியம்” என்று அவர் கூறினார்.

