போடு தகிட தகிட .. அமேசானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் !!
போடு தகிட தகிட .. அமேசானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் !!

மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெள்ளித்திரையில் ஜொலிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் இன்று அறிவித்துள்ளது.

