விக்ரம் படத்தில் நடிக்கிறார் குயின் நடிகை.. உறுதிப்படுத்திய புகைப்படம் !!
விக்ரம் படத்தில் நடிக்கிறார் குயின் நடிகை.. உறுதிப்படுத்திய புகைப்படம் !!

5 மணி குயின் என அழைக்கப்படுபவர் நடிகை ஷிவானி நாராயணன். ஏனெனில் நாள்தோறும் மாலை 5 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வருகிறார்.

ஷிவானி நாராயணன் முதலில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இதனிடையே நடிகை ஷிவானி சின்னத்திரையில் இருந்து விலகி திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிராறா என்பது உறுதியாகவில்லை.
newstm.in

