Theme Check

வினாத்தாள் வெளியான விவகாரம்.. முதன்மைக் கல்வி அலுவலர் விடுவிப்பு..!

வினாத்தாள் வெளியான விவகாரம்.. முதன்மைக் கல்வி அலுவலர் விடுவிப்பு..!

வினாத்தாள் வெளியான விவகாரம்.. முதன்மைக் கல்வி அலுவலர் விடுவிப்பு..!
X

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

ஆனால், நிகழாண்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை தயார் செய்து கொள்ளுமாறு கல்வித் துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில், நேற்று (14ம் தேதி) நடைபெறவிருந்த 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு, 10-ம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை வெளியானது. இது, அந்தப் பகுதியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு வாட்ஸ் அப் வழியாக பகிரப்பட்டது.

இதனால், கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில், செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானது தெரிய வந்தது.

தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேற்று காலை விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வத்தை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தும், அந்த பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணபிரியா முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it