Theme Check

பிரதமர் மோடியை சாடியுள்ள ராகுல் காந்தி..!!

பிரதமர் மோடியை சாடியுள்ள ராகுல் காந்தி..!!

பிரதமர் மோடியை சாடியுள்ள ராகுல் காந்தி..!!
X

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-ம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்களும், ஆய்வாளர்களும் எச்சரித்து வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர்.

தற்போது வரை 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை முறையாக கையாளவில்லை என்று ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தடுப்பூசி மேலாண்மையிலும் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, இன்று தனது ட்விட்டரில் தடுப்பூசிகள் எங்கே? என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது எனவும் இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திலுந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது எனவும் பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

Tags:
Next Story
Share it