Theme Check

2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது சரியா - ராகுல் காந்தி ட்வீட் !!

2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது சரியா - ராகுல் காந்தி ட்வீட் !!

2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது சரியா - ராகுல் காந்தி ட்வீட் !!
X

இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட் பதிவில், “இரண்டு பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது” பதிவிட்டுள்ளார். சமையல் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான செய்தியை தனது ட்விட்டில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

Tags:
Next Story
Share it