Theme Check

ரயில்வே அதிரடி.. ஏசி இனி குளிராது.. பயணிகள் மகிழ்ச்சி..!

ரயில்வே அதிரடி.. ஏசி இனி குளிராது.. பயணிகள் மகிழ்ச்சி..!

ரயில்வே அதிரடி.. ஏசி இனி குளிராது.. பயணிகள் மகிழ்ச்சி..!
X

ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி, போர்வை, தலையணை போன்றவை வழங்கப்பட்டு வந்தது. பயணக் கட்டணத்துடன் இவைகளுக்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா முதல் அலை பரவத் தொடங்கிய காலத்தில், அதாவது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயணிகளுக்கு போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்பட மாட்டாது; பயணிகள், தங்களுக்கான போர்வைகளை வீட்டில் இருந்து கொண்டு வரவேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்தது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கில் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு மீண்டும் கம்பளி, போர்வை, தலையணைகளை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவில், ‘கொரோனா தொற்று காரணமாக ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி, போர்வை, தலையணை வழங்கப்பட மாட்டாது என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.

மேலும், பயணிகளுக்கு கம்பளி, போர்வை, தலையணைகளை வழங்கும் முறையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பளி, போர்வை, தலையணை நடைமுறைக்கு வருவதால், ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
Share it