மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய ரயில்வே ஊழியர்..! 6 மாதமாக அடைத்து வைத்து கொடூரம்..
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய ரயில்வே ஊழியர்..! 6 மாதமாக அடைத்து வைத்து கொடூரம்..

சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து ஆறுமாதமாக தன்னுடைய வீட்டிலேயே அடைத்து வைத்து நாள்தோறும் பாலியல் பலாத்காரம் செய்த காமூகன் சிக்கினார். ஆந்திராவைச் சேர்ந்த சேர்ந்த சங்கர்ராவ் என்பவர், சென்னையில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினர். அப்போது அங்கு பேருந்து நிலையத்தில் தனியாக ஒரு சிறுமி நிற்பதை பார்த்த சங்கர்ராவ், அந்த சிறுமியிடம் நைசாக பேசி மிட்டாய் வாங்கி கொடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.
திருவெற்றியூரில் தான் வசிக்கும் ரயில்வே குடியிருப்பு வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் ஒரு கட்டத்தில் சிறுமிக்கு உணவு பொருட்களில் போதை பொருட்களை கலந்து கொடுத்து தனது விருப்பத்திற்கு அந்த சிறுமியை சிரழித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சிறுமிக்கு இந்த கொடுமை நாள்தோறும் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி ஒரு நாள் அவரது வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடினார்.
பின்னர் எப்படியோ வழிபோன போக்கில் சென்ட்ரஸ் ரயில் நிலையத்தில் வந்து நின்றுள்ளார். தனியாக இருப்பதை கண்ட போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சங்கர் ராவ் வீட்டிற்கு சென்று அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமிக்கு நடத்திய மருத்துவ சோதனையில் சிறுமி 4 மாத கர்பமாக இருப்பதும் தெரிந்தது.
விசாரணையில் பாட்டியின் அரவணைப்பில் வசித்து வந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஒரு நாள் வீட்டில் இருந்து வழிதவறி சென்றபோது சங்கர் ராவ் பிடியில் சிக்கியதும் தெரியவந்தது. சங்கர் ராவ் ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in


