ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. இவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. இவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Clerk Cum Typist (Under Sports Quota)
காலியிடங்கள்: 05
சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள்
தகுதி: குறைந்த பட்சம் பிளஸ் 2 தேர்ச்சி
விளையாட்டு தகுதி: வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 தேதிக்கு பின்னர் விளையாட்டில் பெற்ற சாதனைகள் மட்டும் விளையாட்டுத் தகுதியாத கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.250, இதர பிரிவினர் ரூ.500. கட்டணத்தை The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Chennai. என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in அல்லது www.rrcmas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, Egmore, Chennai - 600 008.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13-06-2022.

