Theme Check

தமிழகத்தில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
X

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (11ம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (11ம் தேதி) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (12ம் தேதி) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் (13ம் தேதி) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 14, 15ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (11ம் தேதி) இடி மழையுடன் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it