Theme Check

“ராஜேந்திர பாலாஜி வேறு கார்களில் மாறி மாறி சென்றுள்ளார்”!

“ராஜேந்திர பாலாஜி வேறு கார்களில் மாறி மாறி சென்றுள்ளார்”!

“ராஜேந்திர பாலாஜி வேறு கார்களில் மாறி மாறி சென்றுள்ளார்”!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இருந்து வெவ்வேறு கார்களில் மாறிச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

rajendra-balaji

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி பிடிக்க தனிப்படை போலீஸார் பெங்களூரு, கேரளா, கொடைக்கானல், மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டுள்ளனர்.

sc

கடந்த 5 நாட்களாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். எந்நேரமும் அவரை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it