ரஜினி மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!
ரஜினி மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது, பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற வகையிலும், தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலை கழக மாநகர தலைவர் நேருதாஸ், ரஜினி மீது புகார் மனு கொடுத்துள்ளார். அவர் அளித்திருந்த மனுவில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்.
கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு, நிருபர்களிடம் பேசிய நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.
newstm.in

