கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - ரஜினி

கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - ரஜினி

கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - ரஜினி
X

பிரபல இயக்குநரும் இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 54 வயதான அவரது மறைவு செய்தியை கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.இன்று அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரே தனது காரில் சென்று மருத்துவமனைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.


இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it