இளம் நடிகரை காதலிக்கும் ரஜினி பட ஹீரோயின்? பரபரக்கும் கிசு கிசு.. இன்ஸ்டா பதிவு !
இளம் நடிகரை காதலிக்கும் ரஜினி பட ஹீரோயின்? பரபரக்கும் கிசு கிசு.. இன்ஸ்டா பதிவு !

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும்(Sonakshi Sinha), இளம் நடிகர் ஜஹீர் இக்பாலும் காதலிப்பதாக பாலிவுட் திரையுலகில் அண்மைக்காலமாக கிசு கிசுக்கப்படுகிறது. ஆனால் தொடர்புடைய அவர்கள் இருவரும் இதுவரை காதலை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் ஜஹீர் இக்பாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் சோனாக்ஷி சின்ஹா. அதோடுமட்டுமல்லாமல், தான் ஜஹீருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

சோனாக்ஷியின் போஸ்ட்டை பார்த்தவர்களோ, தங்கள் இஷ்டத்துக்கு கருத்தை கமாண்ட்களில் பதிவிட தொடங்கினர். சோனாக்சி சின்ஹா கண்டிப்பாக ஜஹீர் இக்பாலை காதலிக்கிறார் என்கிறார்கள்.
ஏற்கனவே இந்த காதல் கிசுகிசு குறித்து நடிகர் ஜஹீர் பேசியுள்ளார். காதல் கிசுகிசுக்களை பார்த்து நானும், சோனாக்ஷியும் சிரித்திருக்கிறோம். அது தான் என்னை பற்றி வந்த முதல் வதந்தி என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. சோனாக்ஷி என் தோழி. எங்களை ஒன்றாக பார்த்தவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம்.

வதந்தி வந்த அன்று நாங்கள் மெசேஜ் செய்தோம். அந்த நேரத்தில் நான் ஒருவரை காதலித்து வந்தேன். அவரை யாருக்கும் தெரியாது. நான் யாரை காதலித்தேன் என்பது சோனாக்ஷிக்கு தெரியும் என அவர் கூறியிருக்கிறார்.
நிதின் இயக்கத்தில் சல்மான் கான் தயாரிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான நோட்புக் படம் மூலம் நடிகரானார் ஜஹீர் இக்பால். அடுத்தாக அவர் சத்ராம் ரமணி இயக்கத்தில் டபுள் எக்ஸ்எல் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி, மகத் ராகவேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் லிங்கா படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் உடன் நடித்திருந்தார்.
newstm.in

