ரஜினி, கமலை ஆட வைத்த புலியூர் சரோஜா.. ஒரே வீட்டில் முடங்கிய சோகம் !

ரஜினி, கமலை ஆட வைத்த புலியூர் சரோஜா.. ஒரே வீட்டில் முடங்கிய சோகம் !

ரஜினி, கமலை ஆட வைத்த புலியூர் சரோஜா.. ஒரே வீட்டில் முடங்கிய சோகம் !
X

ஒரு காலத்தில் படு பிரபலமாக இருந்தவர் புலியூர் சரோஜா. இவரது கணவர் சீனிவாசன். இவர் ஒரு நடிகர். ஏராளமான படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துள்ளார். சரோஜா இந்திய சினிமாவில் கோலோச்சிய நடன இயக்குநர்களில் முக்கியமானவர். கமல், ரஜினி, விஜயகாந்த், சிலிக் ஸ்மிதா உள்ளிட்ட அனைத்துப் பிரபல நடிகர், நடிகைளை அந்தக்காலத்தில் ஆட்டு வித்தவர்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா என ரஜினியையும் இளமை இதோ இதோ எனப் பாடியபடியே கமலையும், நேத்து ராத்திரி யம்மா என சிலிக் ஸ்மிதாவை நெளிய வைத்தவர் வைத்தவர் தான் இந்த புலியூர் சரோஜா. சென்னை வளசரவாக்கத்திலுள்ள தனது வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். தற்போது சரோஜாவுக்கு 83 வயதாகிறது.

puliur saroja

சரோஜாவின் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்ட அவரது ஒரே மகன் சத்தியநாராயணன் மறைவு. அண்மையில் பேட்டி அளித்த அவர், என் உயிராக இருந்த மகன் சத்தியநாராயணனை காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுகிட்டிருந்தான். தஞ்சாவூர்ல ஒருநாள் தன் நண்பனுடன் ரோட்டோரத்துல நின்னு இளநீர் குடிச்சுகிட்டிருந்திருக்கான். அந்த வழியே வேகமா போன பஸ் ஒண்ணு அவன் மேல ஏறினதுல சம்பவ இடத்துலயே இறந்துட்டான். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுக்கு அப்புறமா என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு பிரமை பிடிச்ச மாதிரி மாறினேன் என கூறினார்.

puliur saroja

அவனே போனபிறகு சொத்து சுகம் எதையும் அனுபவிக்க விருப்பமில்ல. இப்போ வசிக்குற இந்த வீடு உட்பட எங்களோட எல்லாச் சொத்துகளையும் தானம் செய்யுறதா எழுதி வெச்சுட்டோம் என கூறினார். மேலும் மகனின் நினைவாகப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அதில் குறைந்த கட்டணத்தில் ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

யாருக்கும் தொந்தரவு கொடுக்காம நானும் என் வீட்டுக்காரரும் அமைதியா வாழ்ந்துகிட்டிருக்கோம். நாங்க நடத்துற ஸ்கூலுக்கு, என் பையன் பிறந்தநாள், நினைவுநாள், முக்கியமான பண்டிகை சமயத்துல மட்டும் போய் குழந்தைகளோடு நேரம் செலவிடுவேன். மத்தபடி இந்த வீடுதான் எனக்கான கூடு எனவும் அவர் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it