அமெரிக்காவில் மாஸ் காட்டும் ரஜினி..!!

அமெரிக்காவில் மாஸ் காட்டும் ரஜினி..!!

அமெரிக்காவில் மாஸ் காட்டும் ரஜினி..!!
X

அமெரிக்காவில், ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் கோரி இருந்தாா். அதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில், சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். அவருடன், குடும்பத்தினரும் சென்றனர்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:
Next Story
Share it