கொரோனா காலத்திலும் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி!!

கொரோனா காலத்திலும் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி!!

கொரோனா காலத்திலும் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி!!
X

அரசியல் வாழ்க்கையை துறந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. மற்ற பணிகளையும் விரைவாக முடித்து அண்ணாத்த படத்தை வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். அதாவது ரஜினியுடன் 14 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா பறக்க உள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it