பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!!
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!!

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நள்ளிரவு 1 மணிக்கு, தனது 98வது வயதில் காலமானார்.
தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பேராசிரியர் அன்பழகனின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பெரும் இழப்பு. ஸ்டாலினுக்கு அரசியல் ஆசானாகவும், திமுகவிற்கு பெரும் தூணாகவும் இருந்து வந்த பேராசிரியரின் இழப்பு திமுக தொண்டர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.

பேராசிரியர் திரு.அன்பழகனின் உடல் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் , கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் என பலரும் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.
newstm.in

