ரஜினியின் அடுத்த படத்திலும் நயன் தாரா! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!!
ரஜினியின் அடுத்த படத்திலும் நயன் தாரா! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரஜினியின் 168வது படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனாவும், இன்னொரு ஜோடியாக குஷ்புவும் நடித்து வருகிறார்கள். ரஜினியின் மகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் படத்தில் தற்போது நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என்று சன் பிக்சர்ஸ் சார்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவர் 168’ படப்பிடிப்பில் விரைவில் நயன்தாரா கலந்துக் கொள்வார் என்று தெரிகிறது. ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கும் நயன்தாராவுக்கும் என்ன உறவு? என்ன கேரெக்டரில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே மூன்று பிரபல நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் போது, நான்காவதாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு இந்த படத்தில் நயன்தாரா என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், பலரும், நயன் உள்ளே வந்தாச்சுல்ல... அப்போ மீனா, குஷ்பு எல்லாம் படத்துல டம்மி தான் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
newstm.in

