முக்கியமான விஷயத்தை ஷேர் செய்துள்ள ரஜினியின் மகள்!!
முக்கியமான விஷயத்தை ஷேர் செய்துள்ள ரஜினியின் மகள்!!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுந்தர்யா சில விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜஸ்வர்யா. அவர் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இளைய மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணத்தில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இரண்டாவது மகளான சவுந்தர்யா ஊக்கமளிக்கும் வகையில் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, சவுந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு ஹூட் என்ற ஆப்பை ரிலீஸ் செய்தார். வாய்ஸ் நோட் அனுப்பவும் கேட்கவும் முடியும் வகையில் இந்த ஆப் அமைக்கப்பட்டது.

இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது வாய்ஸ் நோட்டுடன் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த செயலி குறித்த ஐடியா எப்படி வந்தது என்பது குறித்து சவுந்தர்யா விளக்கம் அளித்துள்ளார். இப்படி ஒரு ஆப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே ரஜினியால்தான் தோன்றியதாக கூறியுள்ளார்.
தமிழ் படிக்க மட்டுமே தெரிந்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு முறை தமிழில் ட்விட் போடுவதற்காக சவுந்தர்யாவுக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருந்தாராம். அதனைக் கேட்ட பிறகுதான், இப்படியான பிரபலங்களின் குரல் நேடியாக மக்களை சென்றடைய வேண்டும் என ஹூட் ஆப்பை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

ஹூட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி தனது வாய்ஸ் நோட்டை வெளியிட்டு வருகிறார். அண்ணாத்த படத்தின் ப்ரிவியூ ஷோவை குடும்பத்துடன் பார்த்தது மற்றும் அண்ணாத்த படத்தின் 50வது நாள் வெற்றியை வாழ்த்தி வாய்ஸ் நோட் ஷேர் செய்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in

