ரஜினியின் ஆதரவு எப்போதும் இருக்கு! நடிகை குஷ்பு சந்தோஷ பிரச்சாரம்!
ரஜினியின் ஆதரவு எப்போதும் இருக்கு! நடிகை குஷ்பு சந்தோஷ பிரச்சாரம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது . இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்படுகிறார். நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊர்வலமாக வந்து செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியுள்ளார்.

அதில் தமிழகத்தில் ஒரு தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் களத்தில் உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. வாழ்க்கைச் சவாலில் வென்று வந்தது போல் இந்த தேர்தல் சவாலையும் வென்று அரசியலிலும் நிலையான இடத்தை பிடிப்பேன்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை இதில் ஜெயிக்க முடியாது என்கின்றனர் அரசியல் நண்பர்கள். திமுகவின் கோட்டையை விட்டுவிட்டு ஸ்டாலின் எதற்காக கொளத்தூரில் போட்டியிட வேண்டும்.அதே போல் சூப்பர்ஸ்டாரின் ஆதரவும் எப்போதும் எனக்கு உண்டு என்று பேசியுள்ளார்.

