கூட்டணியை நினைத்து இப்போது வருத்தப்படும் ராமதாஸ்!!
கூட்டணியை நினைத்து இப்போது வருத்தப்படும் ராமதாஸ்!!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக் குழு கூட்டம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர்,.வட தமிழ்நாட்டில் வாழும் அனேக மக்களும் வன்னியர்கள், ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கூட பெறவில்லை என கூறினார்.

அனைத்து சமுதாயத்தினரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று 45 வருடங்களாக போராடி வருகின்றேன். அதற்காக போராடி உயிர் பலி கொடுத்தும் உள்ளோம். அப்படி போராடிய நான், சரியாக வழி நடத்தவில்லையா என தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.
தனி இட ஒதுக்கீடு என 10.5 விழுக்காடு பெற்றும் நீதிபதி அதற்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார். தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேர தேவை இருந்து இருக்காது.பாமக வினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன. அதனாலேயே 20 தொகுதியில் வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது என்றார்.

இன்னும் நாம் ஏமாளிகளாக இருந்தது போதும் , வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இனி வரும் காலத்தில் பணம் முக்கியம் இல்லை. இனம் தான் முக்கியம், மானம் தான் முக்கியம் என்று வீரத்துடன் செயல்படுவோம் என்றார்.
newstm.in

