சித்தி 2-வில் ரம்யா கிருஷ்ணன், ஸ்நேகா..?
சித்தி 2-வில் ரம்யா கிருஷ்ணன், ஸ்நேகா..?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சித்தி- 2’ சீரியலில் ரம்யா கிருஷ்ணன் அல்லது ஸ்நேகா போன்றோர் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானதை குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ராதிகா.
தமிழக இல்லங்களில் நைட்டீஸ் கிட்ஸ் வாழும் வரை சித்தி சிரீயலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொடராக அது அமைந்தது. நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, தொலைக்காட்சி துறையில் சூப்பர் ஸ்டாராக மாறினார்.
அதற்கு பிறகு பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டன. தற்போது வரை பெண்களை மையப்படுத்திய தொடர்களுக்கு மட்டுமே மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதற்கு காரணமாக அமைந்தது சித்தி தொடர் தான்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு, இன்னொரு சித்தியின் கதை என்று சித்தி -2 தொடரை தொடங்கினார் ராதிகா. முந்தைய தொடர் போல வரவேற்பு பெறவில்லை என்றாலும், தொடர்ந்து ரசிகர்களால் ஆர்வமாக சித்தி- 2 பார்க்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராதிகா.
அவருடைய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அல்லது ஸ்நேகா அல்லது தேவயாணி அல்லது மீனா போன்றோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சித்தி- 2 வை தயாரித்து வரும் ராடன் நிறுவனம் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை எதையும் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யாமல் இருந்தது.
தற்போது இதுகுறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ராதிகா, சித்தி- 2வில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எனக்கு நேரம் கிடைத்தால் மீண்டும் நடிக்க தொடங்குவேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் சித்தி -2 தொடரில் பிரபல நடிகைகள் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது.

