உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலை., முன்னேற்றம்
உலகளவில் சிறந்த உயர்கல்வி பயிலக்கூடிய கல்விநிறுவனங்களுக்கான பட்டியலில் 24 இடங்கள் முன்னேறி 373வது இடத்தை பிடித்துள்ளது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.குவாக்குவாரெலி சைமன்ட்ஸ் என்கிற நிறுவனம் உலகளவில் பல்வேறு நாடுகளில் நிலவும் கல்விச்சூழலை பகுப்பாய்வு செய்து ஆண்டுதோறும் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் உலகளவில் உயர்கல்வி பயில்வதற்கு சிறப்பான கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அந்நிறுவனம் வெலியிட்டுள்ளது. இதில் டெல்லி ஐஐடி கல்லூரி, கரக்கூர் ஐஐடி கல்லூரி மற்றும் மும்பை ஐஐடி கல்லூரி முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.முன்னதாக இருந்துவந்த நிலையில் இருந்து 7 இடங்கள் முன்னேறியுள்ளது சென்னை ஐஐடி கல்லூரி. மேலும், சென்னையைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் கடந்தாண்டை விட 24 இடங்கள் முன்னேறி 373வது இடத்தை முன்னேறியுள்ளது.

கல்வி செயல்பாடுகளில் சிறந்து விளங்குவது, அதை சார்ந்த திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள நற்பெயர் மற்றும் இதுவரை வெளியான ஆராய்ச்சி கட்டுரைகள் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
newstm.in