Theme Check

ராப் பாடல் - வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையை சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார்,அவருக்கு திமுக தலைவர் மு.கஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராப் பாடல் - வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
X

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. அதில் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார்..

ராப் பாடல் - வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

இந்தப் பாடலை தெருகுரல் என்ற பெயரில் வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி வந்துள்ளார்.. கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய இந்த பாடலை இணையதளம் வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்து அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்..

திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாகவும் இளைஞர் அறிவு தனது கையொப்பத்தை பதிவு செய்தார்... பின்னர் பேசிய அறிவு என்னுடைய பாடல் தமிழகம் முழுவதும் பார்த்து ரசித்து இருந்தாலும் ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் தன்னை அழைத்து பாராட்டியது மறக்க முடியாத நாளாக இன்று மாறியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it